Saturday, October 13, 2012

இன்னோசென்ஸ் ஆப் முஸ்லீம்சும் அவசியமில்லா அமெரிக்க எதிர்ப்பும்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
 
அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகள், கொத்தளிப்புகள் என சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. 'யார் இதன் உண்மையான தயாரிப்பாளர்?' என்று உறுதிபடுத்தப்படாத ஒரு அநாமதேய திரைப்படம் விஷமத்தனமாக இணையதளத்தில் இறக்கப்பட்டு இஸ்லாமிய மக்களை உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
'இன்னோசென்ஸ் ஆப் முஸ்லீம்' என்ற 74 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப் படம் இது வரை பெருந்திராளன மக்கள் இருக்கும் அரங்கில் திரையிடப்படவில்லை முதலில் 'Dessert Warrior' என்றும், பிறகு 'இன்னோசென்ஸ் ஆப்பின்லேடன்' என்று பெயர் மாற்றம் பெற்றும், இறுதியில் 'இன்னோசென்ஸ ஆப் முஸ்லீம்' என்று பெயர் தாங்கி, ஆனால் உள்ளீடான கருத்தில் 'அரகண்ட் ஆப் முஸ்லீம்ஸ்' என்பதாக வெளிப்பட்டுள்ளது.
 
இந்த திரைப்படம் குறித்த விமர்சனங்களை வெளியிட்டுள்ள உலகின் முன்னணி நாளிதழ்கள், "இது ஒரு விஷமத்தனமான கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட திரைப்படமே என்ற ஒரு மித்த கருத்தையே கூறியுள்ளன!
 
மாற்றுகருத்தை முன்வைக்கும் நோக்கமோ, இருக்கும் யதார்த்தை விமர்சனப் பூர்வமாக அலசும் ஆன்மபலமோ இந்த திரைபடத்தில் வெளிப்படவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரையும், அதனை தோற்றுவித்தவரையும், இரக்கமற்ற காட்டுமிராண்டிகளாகவும், முட்டாள்களாகவும் அடையாளப்படுத்தும் கலைத்திறமை, மிகுந்த ஆளுமைத் திறனுடனும் நுட்பமாகவும் கையாளப்பட்டுள்ளது. ஆகவேதான் உலகின் எந்த உன்னத கலைஞனோ, படைப்பாளியோ, சுதந்திரச்சிந்தனையாளர்கள் இப்படத்தை இது வரை அங்கீகரிக்கவில்லை. எனவே இது அலட்சியப்படுத்தவேண்டிய திரைப்படம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
 
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படைப்பை வெளிக்கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் உலகின் ஒரு சில இடங்களில் அங்குமிங்குமாக சில சம்பவங்கங்கள் நடந்தேறியுள்ளன. லிபியாவின் பாங்காயிலுள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு அதன் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபனும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான், ஏமன் மற்றும் சில அரபுநாடுகளிலும் அமெரிக்க தூரதரகத்திற்கு எதிரான போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன. உண்மையிலேயே இஸ்லாமியர்கள் 'இன்னோசென்ஸ்' தான் என்பது இதிலிருந்து தெரிகிறது.
 
இந்தியாவில் காஷமீரில் உள்ள ஸ்ரீநகருக்கு அடுத்தபடியாக அதிக எதிர். இப்படத்திற்கு சென்னையில் வெளிப்பட்டுள்ளன.
 
அறிவார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், "இது போன்ற ஒரு ஆக்ரோஷமான எதிர்வினை இஸ்லாமியர்களை மோசமாக சித்தரித்தவர்களின் நோக்கத்தை நிறைவேற்றியாகிவிடுமே" என்று தான் கவலைப்படுகின்றனர்.
யாராலும் பொருட்படுத்தப்படாத ஒரு திரைப்படைத்தை அனைத்துலக கவனத்திற்கும் வலிந்து கொண்டு சென்ற புண்ணியத்தை ஆக்ரோஷகாரர்கள் பெற்று கொண்டனர்.
இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். என்றால் இதற்கு மாற்றாக இஸ்லாமிய நோக்கங்களை வெளிப்படுத்தும் உன்னத கலைபடைப்புகளை கொண்டுவரலாம் இதற்குத் தகுதியான தலைசிறந்த கலைஞர்கள் ஏராளமனோர் உள்ளனர். அடுத்ததாக அரசியல் ரீதியாக ராஜதந்திரத்துடன் காய் நகர்த்தி இதை இணைதளத்திலிருந்து அப்புறப்படுத்திருக்கலாம்!
 
மக்களை திரட்டி வெகுஜனரீதியாக எதிர்ப்பை வெளிப்படுத்தவிரும்பினால் அனைத்து இஸ்லாமியர்களும் பிரம்மாண்டமாக ஆங்காங்கே திரண்டு தொழுகை நடத்தி, "எல்லாம் வல்ல அல்லாவே துர்நோக்கம் கொண்ட இத்திரைப்படத்தை உருவாக்கியவர்களின் இதயத்தை பண்படுத்துவாயாக; அவர்களை மன்னிப்பாயாக..." என உருக்கமாக இறைவனிடம் வேண்டுகோள் வைத்திருக்கலாம்; இதைத் தவிர்த்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போராட்டங்கள் இஸ்லாமியரல்லாதவர்களின் ஆதரவை இழப்பதற்கே வழிவகுக்கும்.
 
மற்றொரு முக்கியமான அம்சம் இந்த திரைப்பட உருவாக்கத்தில் எந்த சம்மந்தமுமில்லாத அமெரிக்காவை எதிர்ப்பதாகும்! அதுவும் பாங்காக்கில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களுக்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சில இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான போட்டி அரசியலால் சென்னை நகரம் ஸ்தம்பித்தது சில நாட்கள்!
 
ஒரு கலைபடைப்பின் மேன்மை என்பது அது ஏற்படுத்தும் மேன்மையான உணர்வுகளில் மட்டுமே அடங்கியுள்ளது. ஒரு நாகரீக சமூகத்தின் பண்பாடு என்பது இக்கட்டான சோதனை நேரங்களில் அது தன்னை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதே! இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அமைதிகாத்து இப்படத்தை அலட்சியப்படுத்தியதன் மூலம் இதை நிருபித்துள்ளனர்.
 
  NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
20-9-2012

No comments: