Monday, September 7, 2009

சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?

-சாவித்திரிகண்ணன்

சமீப காலமாக எனக்கு இந்த So called social workers பற்றிய கசப்பான அனுபவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 வருடங்களாக பத்திரிக்கை துறையில் இயங்கி கொண்டிருக்கும் எனக்கு அடிக்கடி அரசியல் வாதிகளை விமர்சிப்பது தவிர்கக முடியாததாகிறது. இப்படி அடிக்கடி நெகடிவ்வான அம்சங்களையே பார்க்கவும், எழுதவும் வேண்டித் தொலைகிறதே..... என சற்றேனும் பாசிடிவ்வாக, இயங்கி கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை, அவர்களின் செயல்பாடுகளை எழுதி உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்படுத்தலாமே என தோன்றியதின் விளைவாக ஒரு சிலரைப்பற்றி எழுதியுள்ளேன். ஆனால் விளம்பரமும், புகழும் இந்த சமூக ஆர்வலர்களை எப்படியெல்லாம்.... சந்தர்பபவாத சுயமோகிகளாக உருவாக்கிவிடுகிறது என்று அனுபவங்கள் வாய்க்கும் போது எச்சரிக்கை உணர்வே மேலோங்குகிறது.

பத்திரிக்கைதுறையில் நான் மிகவும் மதிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆர்.சபிமுன்னா. சபிமுன்னா ஜீனியர் விகடனின் வட இந்திய நிருபராக உள்ளார். பத்திரிகை துறையை மக்களுக்கு பயனளிக்கும் துறையாக பயன்படுத்தவேண்டும் என்ற கருத்திற்கு ஒத்திசைந்த நண்பரான சபிமுன்னா சமீபத்தில் ஜீனியர் விகடனில் ஒரு செய்தி எழுதினார். அதில் சாய் என்ற எட்டுவயது சிறுவன் ஒரு கூட்டத்தாரால் கடத்தப்பட்டு கொடுமைபடுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய தமிழ் போலீஸ் அதிகாரி மலர்விழியால் காப்பாற்றப்பட்டதாக எழுதியிருந்தார். இது ஜீனியர்விகடனில் பிரசுரமாகியும் சிறுவனின் பெற்றோர்களை கண்டடைய முடியவில்லை. இது சமயத்தில் தி.நகர் காந்தி கல்வி நிலையத்திற்கு வந்திருந்த சேவாலயா அறங்காவலர் முரளிதரனிடம் இந்த செய்தியைச் சொன்னேன். அவர் உடனே, "நான் ஜீனியர் விகடனை பார்க்கவில்லை. நான் அந்த சிறுவனை சேவாலயத்தில் வைத்து வளர்க்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் நிருபரிடம் பேசி உதவ வேண்டும் என்றார்.

அடுத்தநாள் நான் நண்பர் சபிமுன்னாவிடம் சேவாலயா முரளிதரன் விருப்படுவதை தெரிவித்தேன். எங்கள் இருவருக்குமே தமிழ் பேசும் சிறுவன் தமிழ்ச்சூழலில் வளர்வது தான் உகந்ததாயிருக்கும்.அவன் தமிழ்நாட்டிற்கு வரும்பட்சத்தில் அவன் கூறிய தி.நகரில் அவன் வசித்த இருப்பிடத்தை காணவழியுண்டு என்றும் மனதில் பட்டது. ஆனால் சேவாலயா முரளிதரன் சில சர்ச்சைகளில் சிக்கி ஏற்கெனவே அவர் மீதான அபிப்ராயங்கள் பழுதுபட்டிருந்தது. இதை கருத்தில் வைத்து, 'எங்கள் அலுவலகத்தில் பேசி அனுமதி வாங்கிவிட்டுச் சொல்கிறேன்' என்றார். பிறகு ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்ட சபிமுன்னா, "எங்கள் அலுவலகத்தில் கொஞ்சம் தயங்கினார்கள். நான், நாம் பேசியபடி எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தேன். சாவித்திரிகண்ணன் வேறு பலமாக ரெக்கமண்ட்' செய்கிறார் என்றேன். 'அப்படியா? சாவித்திரிகண்ணன் தவறான ஆளைச் சொல்வதற்கு வாய்பில்லை. சரி செய்யுங்கள்' என பச்சைகொடி காட்டிவிட்டனர்." என்றார்.

இதையடுத்து நான் முரளிதரனிடம் சபிமுன்னா செல்நம்பரைக் கொடுத்து பேசச் சொன்னேன். இவ்வாறாக உருவான தொடர்பில் முரளிதரனின் ஆசையை நிறைவேற்ற சபிமுன்னாவும் களத்தில் இறங்கினார். இதற்கிடையே அந்தப்பகுதியின் தமிழ் போலீஸ் அதிகாரி மலர்விழி இடமாற்றலானதில் சிறுவனை தமிழகத்திற்கு அழைத்து வருவதில் தொய்வு ஏற்பட்டது. முரளிதரனின் வேண்டுகோளை அங்கிருந்த அரசு சிறுவர் காப்பகம் பொருட்படுத்தவில்லை. சிறுவன் கடத்தப்பட்டு ஆறுமாதமானதில் அவன் இந்தியை ஒரளவு பேசக்கற்றுக்கொண்டு இயல்பாக வளையவர ஆரம்பித்துள்ளான். எனவே பெற்றோர்கள் கேட்டால் ஒழிய தருவதாயில்லை என்ற நிலைபாட்டிலிருந்தனர் அபனாகர் என்ற அரசு சிறுவர் இல்லத்தினர். ஆயினும் சபிமுன்னா நேரிலேயே பத்திரிக்கை புகைப்படக்காரரை அனுப்பி பேசியதோடு பீகாரில் ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிபாரிசையும் பெற்று சாயை தமிழகத்திற்கு அனுப்பும் இசைவை பெற்றார். இவ்வளவு முயற்சிகளையும் செய்து, முரளிதரன் டெல்லிக்கு 'பிளைட்டில்' வந்திறங்குவதாயும், தான் கார் ஏற்பாடு செய்து அவரை அலிகார் அழைத்துக் கொள்வதாயும், அவர் சிறுவனோடு திரும்புவதற்கான ரிடர்ன் டிக்கெட் உட்பட எடுத்திருப்பாதாகவும் எனக்குத் தகவல் தந்தார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதே சமயம் முரளிதரனிடமிருந்து எனக்கு எந்த தகவலுமில்லை. அதனால் நானே அவரைத் தொடர்பு கொண்டேன். உடனே முரளிதரன், "கண்ணன் நான் திரும்பி வந்தவுடன் உடனே பிரஸ்மீட் வைக்க வேண்டும், முடியுமல்லவா?" என்றார்.

நான், "எதற்காக பிரஸ்மீட்" என்றேன்.

அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

தொடர்ந்து நானே, "சார் நம்முடைய நோக்கம் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைப்பது. சிறுவனின் மனநிலை அறிந்து பேசி அவனது விருப்பபடி பெற்றோரைக் கண்டடைவது. இந்த முயற்சி பலனளிக்காவிட்டால் சேவாலயாவில் பாதுகாப்புடன் வளர்ப்பது. பிரஸ்மீட்டிற்கு ஏன் அவ்வளவு அவசரம்?" என்றேன்.

இதைக்கேட்ட முரளி , ஒரு நிமிடம் அமைதியாக இருந்து,

"சரி, நான் பார்த்துக்கறேன்..." என்றார்.

இந்த பதிலுக்கு என்ன அர்த்தம் கொள்வது என அப்போது எனக்கு விளங்கவில்லை. பிறகு முரளி புறப்பட்டு சென்றார். அவர் வந்து சேர்ந்ததை சபிமுன்னா எனக்கு தெரிவித்தார். அதன்பிறகு இரண்டு நாள் கழித்து சபிமுன்னாவிடமிருந்து போன். "முரளிதரன் சென்னை வந்து சேர்ந்திருக்கணுமே உங்களை எதுவும் தொடர்புகொண்டு பேசினானா...? என்றார். எனக்கு சற்றே அதிர்ச்சி. சபிமுன்னா ஒரு மிகச்சிறநத பண்பாளர். மனிதாபிமானி, "பேசினானா..? என்கிறாரே.. என்பதால் "ஏன் என்னாச்சு?" என்றேன்.

"என்னாச்சா, வந்து சேர்ந்ததிலிருந்து அவன் செய்த ஜபர்தஸ்து,அலட்டல் தாங்க முடியலைப்பா. ஏதோ அவன் தன்னை ஒரு வி.ஐ.பி போலவும், நான் என்னவோ அவனை வரவேற்று உதவக்கடமைப்பட்டவன் போலவும் நடந்து கொண்டான். இங்கு அலிகாரில் மிகச்சிறந்த தொண்டு செய்யும் ஃபாதர் ஒருவரை அவனுக்கு நான் அறிமுகப்படுத்தினேன். ஃபாதர் பிளாட்பாரத்தில் அநாதையாகத் திரியும் குழந்தைகளைக் கண்டெடுத்து குளிப்பாட்டி, உணவளித்து படிக்க வைக்கிறார். நாங்கள் மிகவும் மதிக்ககூடிய அவரிடமே இவன் தன்னை மிகப்பெரிய ஆளாக காட்டிக்கொள்வதில் முனைப்பு காட்டினான். சந்திப்பவர்களிடமெல்லாம், "நான் மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன். இனியும் எதற்கு சம்பாதிக்கவேண்டும் என்று தான் டாடாகன்சல்டன்சியில் வேலையை ராஜீனாமா செய்துவிட்டு பொதுச்சேவைக்கு வந்தேன்" என தம்பட்டமடித்தான். ஆனால் அவன் வந்ததிலிருந்து சாப்பாடு, போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட பெருமளவு செலவை நானே செய்தேன்.

இதெல்லாம் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அங்கே அந்த சினுவனை பார்த்தலிடத்து ஒரு வார்த்தை அந்த குழந்தையிடம் கனிவாகப் பேசவில்லை. அக்கரையோடு விசாரிக்கவில்லை. நான் அந்தச் சிறுவனிடம் பக்கத்தில் அமர்ந்து கனிவாகப்பேசிய போது அவனது தாய்மொழி தெலுங்கு என்றும் ஒரளவே தமிழ் தெரிந்துள்ளான் என்றும் அறியவந்தது. அப்போது local press reporters, photographers வந்தார்கள். உடனே இவன் (முரளிதரன்) அந்த குழந்தையை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டு press photographers க்கு போஸ் கொடுத்தான். பிறகு என்னடாவென்றால், ஏதேதோ 'பில்டப்' பண்ணி பேட்டி தந்தான். பத்திரிக்கையாளர்கள் சென்ற பின்பு நான், 'என்ன சார் இநத மாதிரி பிகேவ் பண்றீங்க.." என்றேன். அதற்கு அவன் ஏதேதோசொல்லி சமாளித்து அசடுவழிந்தான்.

உடனே நான், இதே மாதிரி சென்னை சென்று பத்திரிக்கையாளர்களை அழைத்து இவன் பேச வாய்ப்புண்டு என ஊகித்துக்கொண்டேன். இநத சந்தரப்பத்தை மிகப்பெரிய விளம்பரத்திற்கான வாய்ப்பாக கருதும் அவனது உள்நோக்கம் எனக்கு விளங்கிவிட்டது. எனவே அவனிடம், நீங்கள் சென்னை சென்றதும் அவசரப்பட்டு பிரஸ்மீட் வைத்துவிடாதீர்கள், ஜூனியர்விகடன் எடுத்த முயற்சியால் தான் இநத் செய்தி வெளியானது. எனவே எங்கள் ஒத்துழைப்பில் நீங்கள் சிறுவனை தமிழகம் அழைத்து வந்த செய்தி ஜீனியர்விகடனில் தான் முதலாவதாக பிரசுரமாக வேண்டும். அதற்காக ஒரு சிலநாள் பொறுத்த பிறகு பிரஸ்மீட் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் பையனிடம் விவரமாகப்பேசி அவன் இருப்பிடத்தையும், பெற்றோரையும் முயற்ச்சியை மேற்க்கொள்ளுங்கள்" என முரளியிடம் கேட்டுக்கொண்டேன். என்றார்.

ஆனால் சென்னை வந்ததும் உடனே பிரஸ்மீட் வைத்து விட்டார் முரளி. மிகக்குறைவான பத்திரிக்கையாளர்களே அதில் கலந்து கொண்டனர். ஆனால் கலந்து கொள்ளாத பத்திரிக்கைகளுக்கு இவரே செய்தி அனுப்பி, தொலைபேசியிலும் தொடர்புகொண்டு செய்தியை போகும்படி கேட்டுள்ளார் (ஆனால் சபிமுன்னாவிற்கு முரளிதரனின் மனைவி புவனேஸ்வரி, "முரளியிடம் கலந்தாலோசிக்காமல் தான் அவசரப்பட்டு பிரஸ்மீட் வைத்தாக்கூறி ஒரு மன்னிப்பு கடிதம் emailசெய்துள்ளார்) தினமலர், தினமணி, தினகரன், Deconchornical, ஈநாடு, ராஜ் டி.வி, தமிழன் டி.வி..... என ஏகப்பட்ட மீடியாக்களில் செய்தி!

ஒரு சாகஸ வீரனின் வெற்றிக்களிப்போடு சிறுவனை மீட்டுவந்த செய்தியை அதில் விதந்தோதியிருந்தார் முரளிதரன். அதோடு கூடவே அதில் அந்த சிறுவனை பச்சை குழந்தையை தூக்குவது போல் இரு கைகளிலும் படுக்கவைத்த நிலையில் போட்டாவிற்கு போஸ். இப்படி தூக்க கூடிய வயதிலோ, உடல்நிலையிலோ அவன் இல்லை என்பதெல்லாம் யார் கேட்பது? விளம்பரமோகம் தலைக்கேறிவிட்டால் விவஸ்தைக்கு அங்கே இடமேது? பிரசுரமாகிய எதிலும் ஜீனியர்விகடனோ, சபிமுன்னாவோ ஒரு வார்த்தை, ஒரு வரி கூட இல்லை.

இப்படியொரு பிரஸ்மீட்டை நடத்துவது பற்றியோ, நடத்திய பிறகோ கூட முரளிதரன் எனக்கு தகவல் தரவில்லை. சரி, இது போகட்டும் என்றால் சேவாலயா சார்பில் மாதாமாதம் ஒரு நியூஸ்லெட்டர் publish செய்கிறார்கள். இதை பிரிண்டாக மட்டுமன்றி ஏராளமானோருக்கு இ.மெயிலிலும் அனுப்புகிறார்கள். அதன் முதல் பக்கத்திலும் இந்த கதை தான். அதை முரளிதரனே எழுதியுள்ளார். அதன் முதல் paragraphபே ஒரு சுவாரசியமான திகில் கதை போல ஆரம்பமாகிறது. அதில் ஒரிடத்தில் இவர் ஜீனியர்விகடனைப் பார்த்து செய்தி அறிந்து விகடன் அலுவலகத்தில் கேட்டு விசாரித்து சபிமுன்னாவின் தொலைபேசி எண் கண்டடைந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பொய்யை சேவாலயாவின் அதிகாரபூர்வமான நியூஸ்லெட்டரில் எழுதவேண்டிய தேவை என்னவோ? என்னை முழுமையாக இருட்டிப்பு செய்ததில் எனக்கு ஒரு துளியும் இழப்பில்லை. ஏனென்றால் அந்த நீயூஸ்லெட்டர் சேவாலயாவின் நன்கொடையாளர்களுக்குத்தான் செல்கிறது. அவரகளிடம் ஒரு பரிபூரணமான வீரனாக, சேவையாளனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்பு அவருக்கு மேலோங்கி இருப்பதை தான் அந்த செய்தியின் தொனி உணர்த்துகிறது. ஆனால் முரளிதரன் முற்றிலும் உண்மைக்கு மாறான ஆள் என்பதை எனக்கு உணர்த்திவிட்டது. இந்த பிரஸ்மீட் நடத்திய கையோடு முரளிதரன் வெளியூர் சென்றுவிட்டார். அந்தச்சிறுவன் தெலுங்கு சரளமாகப் பேசியதை அறிந்து சேவாலயாவில் வேலைசெய்யும் ஒரு சிலர் தெலுங்கில் பேசியதில் அவன் குறிப்பிட்ட தி.நகரும், விவேகானந்தர் பள்ளியும், ராமச்சந்திர தியேட்டரும் எங்கிருக்கிறது என இணையத்தளம் கூகுளில் போட்டு பார்த்துள்ளனர். அவன் குறிப்பிட்ட தி.நகரும், விவேகானந்தா பள்ளியும், விஜயவாடா என்று அறியவந்து விஜயவாடா போலீஸ் ஸ்டேசனைத் தொடர்புகொண்டதில் ஆந்திரா போலீஸ் மூலம் சிறுவனின் பெற்றோர் கிடைத்துவிட்டனர். மிகவும் நல்ல விசயம் தான். ஒரு தவறான ஆளின், தவறான உள்நோக்கங்களையும் மீறி சூழ்நிலைகளால் சில நல்ல விசயங்களும் நடந்தேறிவிடுகின்றன.

பிறகென்ன மீண்டும் ஒரு பிரஸ்மீட், சுயபிரதாபங்கள்..... நடக்கட்டும், இந்த பிரஸ்மீட்டிற்கான தகவலை எனக்கு sms செய்திருந்தார் முரளி. முரளிக்கும் ஜெர்மன்இந்தியரான ராஜகோபாலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக எத்தனையெத்தனை முறை எனக்கு போன் செய்து மணிக்கணக்கில் புலம்பி உதவி கேட்டிருக்கிறார். ஒரு முறை முரளி வீடுதேடிவந்தும் உதவிகேட்டார். அப்போது சேவாலயாவின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக நான் எடுத்தக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இதில் எனக்கு நெருக்கமான ஒரு சில நண்பர்களின் நட்பிலேகூட விரிசல் ஏற்பட்டது. என்பதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவருடைய குற்ற உணர்வு தான் அவர் என்னோடு போன் பேச தடையாய் இருந்திருக்கக்கூடும் என நினைத்து கொண்டேன். (பிறகு சபிமுன்னா நீங்கள் கண்ணனுக்கு எதுவுமே பேசவில்லை போலிருக்கிறதே என கேட்டதினால் என் லைனுக்கு வந்தார்).

என்னையும், சபியையும் பொறுத்தவரை பத்திரிக்கைதுறையை எப்போதும், ஏதேனும் நல்லகாரியத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்று எங்களிடம் மேலோங்கியிருந்த உணர்ச்சிகளை மட்டும் முரளிதரன் அழகாக 'கேப்பிடலைஸ்' செய்து கொண்டார்.

'ஏதோ நமக்குத் தான் எதையும் செய்ய நேரம் கிடைக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்குகாவது பணம் அனுப்பவேண்டும்' என்று சேவாலயாவிற்கு நாள்தோறும் நன்கொடை தந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் தார்மீக நல்லெண்ங்களை 'கேப்பிட்டலைஸ்' செய்து கொண்டதைப் போல! விவேகானந்தர், மகாத்மாகாந்தி, பாரதியார் போன்ற 'Icon'களை மார்க்கெட்டிங்கிற்கு பயன்படுத்தும் யுக்தியைப் போல!

வேஷமென்றால் ஒரு நாள் வெளுக்கதானே வேண்டும்.

இந்தக்கட்டுரையை 7-09-09 தேதியில் வெளியிட்ட பிறகு சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு தகவல்; சேவாலயா முரளிதரன் அவசரப்பட்டு அல்லது விளம்பர மோகத்திற்கு ஆசைப்பட்டு pressmeet நடத்தியதில் சிறுவன் சாயை எங்கள் பிள்ளைதான் என்று சொந்தம் கொண்டாடி ஒரு சிலர் சேவாலயத்திற்கு வந்துவிட்டனர். நல்லவேளையாக அந்த நேரம் அங்கே முரளிதரன் இல்லாதது கடவுள் கிருபையே! (இருந்திருந்தால் இன்னொரு pressmeet அல்லவா உடனே நடத்தி குழந்தையை ஒப்படைத்திருப்பார்....) வந்தவர்களிடம் சேவாலயா ஆசிரியர் குழுவினர் தீரவிசாரித்ததிலும், சிறுவன் சாய்க்கும் வந்தவர்களை தெரியாததாலும் உஷாரான ஆசிரியர்கள் அவர்களை விரட்டிவிட்டனர். அதன் பிறகே சிறுவனிடம் தெலுங்கு பேசத்தெரிந்த ஆசிரியர்கள் பேசி அவன் குறிப்பிடுவது தி.நகரல்ல, ஸ்ரீநகர் என்றும் அது ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலுள்ள அனகாபள்ளியில் உள்ளதென்பதையும் கூகுள் மூலமாக கண்டறிந்தனர்.

இந்தக்கட்டுரையை நான் எழுதியது சேவாலயா என்ற நிறுவனத்திற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்வதற்கல்ல. மாறாக பொதுத்தொண்டுக்கு வருபவர்கள் ஒரளவிற்காகவது தன்னடக்கம். உண்மை, எளிமையோடு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவ்வளவே.

விமர்சிப்பவர்கள் மீது கோபப்பட்டு, மேன்மேலும் பொய்யும், புரட்டும் பேசுவதை தவிர்த்து தன்னைத்தானே உள்முகமாகப்பார்த்து தெளிவது தான் முரளிதரனுக்கு நல்லதாகும்.

வள்ளுவர் குறளொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று!

Tuesday, June 9, 2009

விடுதலை புலிகளின் வீழ்ச்சி

விடுதலை புலிகளின் வீழ்ச்சி
இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி
-சாவித்திரிகண்ணன்
"விடுதலை புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனரே..... இனி இலங்கை வாழும் தமிழர்களுக்கு யார் பாதுகாப்பு?"
"விடுதலைப் புலிகளை யாராலும் வீழ்ததமுடியாது. வேலுபிள்ளை பிரபாகரன் மரணிககவில்லை, மறைந்திருக்கிறார். சமயம் வரும் போது வெளிப்பட்டு தனி ஈழத்தை வென்றெடுத்தே தீருவார்....
"முதலில் சொல்லப்பட்ட கூற்று, விடுதலைப்புலிகளின் மிதமான ஆதரவாளர்களிடமிருந்து வெளிப்படுதென்றால், இரண்டாவது கூற்று விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளர்கள் சார்ந்தது.
ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகள் தான் இலங்கையில் உள்ள தமிழர்களை துன்பங்களிலிருந்து பாதுகாக்கவல்லவர்கள் என்ற கருத்தே இரு கூற்றுகளில் இருந்தும் வெளிப்படுகிறது.
இது முற்றிலும் தவறானது.
இலங்கையில் அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் அளவற்ற இழப்புகளுக்கும், பெரும் துன்பங்களுக்கும் பிரபாகரனும் அவரை ஒதத பயங்கரவாத இயக்கத்தினருமே காரணமாவர்.
உலக வரலாற்றில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த சர்வாதிகாரிகளான இட்லர், இடிஅமீன், போல்பார்ட் போன்றவர்கள் தங்கள் இனத்தின் காவலர்களாகவே தங்களை அடையாளப்படுத்தினர். ஆயினும் அவர்கள் தான் தங்கள், தங்களது இனங்களின் பேரழிவுகளுக்கே காரணகர்தாக்களாகினர். பிரபாகரனும் இநத வரலாற்று உண்மைக்கு வழுவாத சாட்சியமாகத் திகழ்கிறார்.
இலங்கை தீவில் தமிழ் இனம் சிறந்தோங்கி செழிப்பாக வாழ்ந்த இனமாகும்! இலங்கையின் மொதத நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை தமிழ்களே ஆக்கிரமித்திருந்தனர். கல்வி, அரசுபதவிகள், கலாச்சாரம் என அனைத்திலும் தமிழர்களே அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருநத இநதியத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்களைத் தவிர்த்த வெறும் 12.6 சதவிகித இலங்கைத் தமிழர்களே பெரும் செல்வாக்கோடு இவை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றபோது அப்போதைய பாராளுமன்றத்தில் சிங்களர்கள் எண்ணிக்கை57, இலங்கைத்தமிழர்கள் எணணிக்கை15, இந்திய தமிழர் எண்ணிக்கை 14, இஸ்லாமியர் எண்ணிக்கை 8 என்று இருந்தது.
இந்த சூமூகச்சூழல் கெட்டு இனவெறி இருத்தரப்பிலும் எழுந்ததால் தான் இலங்கையின் அமைதியே பாழ்ப்பட்டது.
இலங்கையில் உளள விகிதாச்சார கணக்கின்படி 74 சதவிகிதம் பெரும்பான்மையாக இருநத சிங்களர்கள் அதற்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பு, அரசபதவிகள் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் பெறாமல் பெருமளவு பின்தங்கி இருந்தனர். பொருளாதாரத்திலும் கூட சிங்களர்களைக் காட்டிலும் தமிழர்களே பெரும் சிறப்போடு திகழ்ந்தனர்.
அதாவது குறைநத எண்ணிக்கையாயிருந்த தமிழர்கள் இலங்கையில் அதிக பலன்களைப் பெற்று திகழ்வதோடு அதிகார மையங்களையும் ஆக்கிரமித்திருப்பதாக சிங்களர்கள் கருதத்தொடங்கினார்கள்.
எனவே தாழ்வு நிலையிருநத பெரும் பான்மை சமூகத்தை தூக்கிவிட்டு இநத ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் பொறுப்பு சுதந்திரமான இலங்கையின் சவாலாக அமைந்தது. இநத சவாலுக்கு தமிழ்தரப்பிலிருந்த தலைவர்கள் ஒத்துழைகக முன்வரவில்லை. அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமே தலைவர்களாக இருநதனர். மாறாக பின்தங்கியிருநத பர்நதுபடட சிங்கள இனத்தின் மீது அக்கரையும், அனுதாபமும் கொண்டு விட்டுகொடுத்து, சமன்பாட்டிற்கு ஒத்துழைத்திருப்பார்களாயின பெரும்பான்மை சமூகத்தின் பொறாமையையும், வெறுப்பையும், முளையிலே கிள்ளியெறிந்துவிட்டு அவர்களது அன்பையும், ஆதரவையும், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நிரந்தரமாக தக்க வைத்திருகக கூடும்.
சர். பொன்னம்பலம் ராமநாதன் போன்ற ஒரு சில - சிங்களர் தமிழர் இணைப்புக்கு பலமான பாலமாக விளங்கிய - தலைவர்கள் இதில் மேற்கொண்ட முயற்சிகள் தந்தை செல்வா என்றழைக்கப்பட்ட செல்வநாயகம் போன்ற தீவிர தமிழ் இன உணர்வு சார்ந்தவர்களால் புரிந்து கொளளப்படாமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் துரதிஷ்டமே!
திரு.பண்டாரநாயகா போன்ற சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப் படுத்திய - லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய - தலைவர் தனது ஆரம்பகாலத்தில் தமிழர்கள் மீது கரிசனத்துடன் இருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால் பின்னாளில் அவரும் நிதானம் தவறிவிட்டார்.
1943-ல் இலங்கை மந்திரிகள் குழு இலங்கை பாராளுமன்றத்தில் இந்தியத் தமிழர்களுக்கு 15 இடங்கள் தரப்படவேண்டுமென சிபாரிசு செய்தது. அந்த சிங்களர்கள் ஏன் மனம்மாறி 1949-ல் இந்திய தமிழர்கள் பத்துலட்சம் பேரின் பிரஜா உரிமையை பறித்தனர் என்பது ஆயுவுக்கு உட்படுத்த வேண்டிய கேள்வியாகும்.
இலங்கையில் சுதந்திரம் பெற்ற முதல் இருபத்தைந்தாண்டுகள் இரு தரப்பிலும் இனவெறி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பெரும்பான்மை சமூகத்தவரான சிங்களரிடம் ஆட்சி அதிகாரபலம் இருந்ததால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் அப்போது தமிழர்கள் வன்முறை வழியை தேர்ந்தெடுக்கவில்லை ஜனநாயகத்திற்கு உட்பட்டே தங்கள் எதிர்ப்புகளை ஆழுத்தமாக வெளிப்படுத்தினர். 1976 வரையிலும் கூட தனி ஈழக்கோரிக்கை என்ற கருத்தாக்கம் வலுப்பெறத் தொடங்கவில்லை.
இலங்கைத் தமிழர்கள் தங்களை விஷேச சிறப்பு பெற்ற தனி இனமாகக் கருதியதையும், தங்கள் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளில் சிறிதும் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவர்களாக இருந்ததையும் அங்கீகரித்து, அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் சிங்களதரப்பு அரசியல் தலைமைகளுக்கு இல்லாமல் போனது பெரும் துரதிஷ்டமே!
அதே சமயம் தமிழர்கள் நடைமுறைவாழ்வில் சிங்களமொழியை துச்சமாக மதித்ததையும், சிங்களர்களைபுறக்கணித்ததையும், தங்களோடு வாழும் சிங்களர்களைக் காட்டிலும், தாங்கள் பிறந்து வளர்ந்த ஒன்று பட்ட இலங்கையைக் காட்டிலும் தமிழ்நாட்டு தமிழர்களையும், இந்தியாவையும் அதிகமாக நேசித்ததையும் சிங்கள மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இலங்கைத்தமிழர்கள் இங்கு நம்மோடு வாழ்ந்தாலும் அவர்களது உடல் தான் இலங்கை மண்ணில் உலவுகிறதேயன்றி அவர்களின் உயிரும், ஆன்மாவும் தமிழ்நாட்டு தமிழர்களைச் சார்ந்தும், இந்தியாவின் பால் ஈர்க்கப்பட்டும்இருக்கிறதே என்ற ஆதங்கம் காலப்போக்கில் கோபமாக, வெறுப்பாக மாறியது சிங்கள இன மக்களுக்கு!
இந்தச்சூழலில் கல்வித்துறையில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் தமிழ் மாணவர்களை, இளைஞர்களை பெரிதும் கோபப்படுத்தியது. பொறியியல் கல்லூரிகளில் சிங்களமாணவனுக்கு 228 மதிப்பெண் எடுத்தாலே போதுமானது என்றும், ஆனால் தமிழ் மாணவர்கள் 250 மதிப்பெண் எடுத்தால் தான் வாய்ப்பு என்பதுமான சட்டம் போடப்பட்டது. ஆயினும் 40 சதவிகிதத்திற்கு மேலான தமிழ் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றனர் என்பதை கவனிக்குமிடத்து பின்தங்கியுள்ள சிங்களமாணவர்களை தமிழ்மாணவர்களுக்கு சமமாக தூக்கிவிடுவதற்காக இப்படி ஒரு சடடம் அரசாங்கம் கொண்டுவர எண்ணியிருக்ககூடும் என்ற புரிதலுக்கு நாம் வரலாம்.
ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்த மாணவர்கள் கடுமையாக அடக்குமுறைக்கு உள்ளானதையும், பெரும் சித்தரவதைகளுக்கு ஆளானதையும், அதுவும் ஆண்டுக்கணக்கில் விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டதையும் அடுத்து ஆயுதம் தாங்கிய அதிகாரமையத்திற்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் தன் எழுச்சியாக உருவானது. ஆட்சியாளர்களின் கொடிய அடக்கு முறையிகளிலருந்து விடுபடுவதற்கு இம்மாதிரியான இளைஞர்களின் எழுச்சி தேவையான ஒன்று தான் என சாதாரண தமிழ்மக்களில் இருந்து பெரிய தலைவர்கள் வரை நம்பி ஆதரவளிகக ஆரம்பித்தனர்.
சிவகுமாரன், சத்தியசீலன், சபாலிங்கம் போன்றவர்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறைக்கு வித்திட்ட முன்னோடிகள். 1971-ல் குட்டிமணி, ஜெகன் போன்றவர்கள் போராளிகளுக்கான இயக்கத்தை தொடங்கினார்.
1974-ல் 'செட்டி' என்றழைக்கப்பட்ட தனபாலசிங்கம் தமிழ் புதிய புலிகள் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இவர் எநத ஒரு அரசியல் சிந்தனைபோக்கு கொண்டவருமல்ல. மக்கள் இயக்கங்களில் பங்கெடுததவருமல்ல. ஆனால் வன்முறை வழியில் பணம் அதிகம் ஈடடலாம் என்ற குறிக்கோளோடு சில கொள்ளைகளையும், கொலைகளையும் நிகழ்த்தியவர், இவரால் ஆரம்பிக்கப்பட்ட இநத இயக்கத்தில் தனது 20வது வயதில் சேர்ந்தார் பிரபாகரன். செட்டி கைதானபிறகு 1976-ல் பிரபாகரனே இதன் தலைவராகி இயக்கத்தின் பெயரை'தமிழிழ விடுதலைப்புலிகள்' என மாற்றிவைத்தார்.
இலங்கை மண்ணில் தமிழ்நாட்டைச்சேர்நத சோழப்பேரரசர்கள் படைநடத்தி ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள அரசர்களையையும் தங்கள் ஆட்சியின் கீழ்கொண்டுவந்து சிங்கள அரசர்களையும், மக்களையும் ஆட்டி படைத்தார்கள் என்பது கடந்த கால வரலாறு. அநதச் சோழர்களின் அரச சின்னம் தான் புலிக்கொடி என்பது நினைவு கூறத்தக்கது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே புத்தூர் வங்கி கொள்ளை, யாழ்பாண மேயராகவிருந்த ஆல்பிரட் துரையப்பா கொலை போன்ற சட்டவிரோத சாகஸ செயல்களின் மூலம் பிரபலமாகிவிட்டார் பிரபாகரன்.
பிரபாகரனின் இந்த சாகஸங்களைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் தமிழ் இளைஞர்கள் ஏராளமானவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்களானார்கள்.
இதே காலகட்டத்தில் டெலோ, பிளாட், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப் போன்ற சுமார் 36 இயக்கங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவானது.
ஒரே இலட்சியம் என்று சொல்லிக்கொண்ட இவ்ர்களால் ஒன்றிணைந்து செயல்படமுடியவில்லை. ஆளாளுக்கு கொலை, வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல் என ஈடுபட்டனர். எல்லா தீய செயல்களுக்கும் சிங்கள இனவெறியைக் காரணம் காட்டி நியாயம் கற்பித்தனர்.
சிங்களர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போராளி இயக்கங்களிடையேபோட்டி, பொறாமை தலைதூக்கி தங்களுக்கு தாங்களே எதிரிகளாக ஒருவரை ஒருவர் கணக்கில்லாமல் சுட்டுக்கொண்டனர்.
போட்டி போராளிகளை மட்டுமின்றி அவர்களுக்கு உதவிசெய்யும் குடும்பத்தாரையும் கூட மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்திரவதைகள் செய்து கொன்றனர்.
இந்த வகையில் தன் சகபோராளி இயக்க தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு கொன்று குவித்து தன்னை மட்டுமே தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக வன்முறையால் நிலைநிறுத்திக் கொண்ட இயக்கம் தான் தமிழிழ விடுதலைப்புலிகள்.
சிங்கள அரசால் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையைவிட இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ்போராளிகளின் எண்ணிக்கையே அதிகம் என்கிறார் தமிழ் ஈழ போராட்ட இயக்கங்களின் முன்னோடியான சி.புஷ்பராஜா.
தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு தோன்றிய பிறகு அது ஒவ்வொரு இடங்களிலும் நிகழ்த்திய கொலை வெறி ஆட்டங்களின் கொடூர எதிர்வினைகளை ஒட்டுமொத்த இலங்கை தமிழ் சமூகமும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.
உதாரணத்திற்கு 1983 ஜீலை 23ல் பலாலி- யாழ்பாணசாலையில் 13 சிங்கள ராணுவ வீரர்கள் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதன் எதிர்வினையாக வெடிதத பெரிய கலவரத்தில் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000தமிழர்கள் வீடுகளை இழந்தனர், 1,50,000தமிழர்கள் அகதிகளாயினர்.
1985-ல் இந்திய அரசின் இடையறாத முயற்சியில் இலங்கை அரசு பணிந்து போராளி இயக்கங்களுடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தது. திம்புவில் இரண்டாவது கடடபேச்சு நடந்து கொண்டிருந்த நிலையில் இப்பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க விரும்பிய விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவமுகாமில் குண்டுவெடித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்படட கலவரத்தில் 200 தமிழர்கள் பலியாயினர். பேச்சுவார்த்தையும் தடைப்பட்டுவிட்டது.
1980களில் தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட தீவிர ஆதரவு அலைகளாலும், நிர்பந்தத்தாலும் மட்டுமின்றி 1981-ல் மாவடட அபிவிருந்தி சபை தேர்தல்களை இலஙகை அரசு கையாண்ட மோசமான அணுகுமுறைகள், அதிகாரப் பரவலில் காட்டி வந்த அவநம்பிக்கை போன்றவை காரணமாக இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவ முன் வந்தது.
இலங்கை போராளி இயக்கங்களுக்கு இந்தியா அளப்பரிய நிதி உதவியும், ஆயுதப் பயிற்சியும் தந்தபோதிலும் கூட இலங்கையை இரண்டாக பிரிக்கும் நோக்கத்திற்கு இந்தியா உடன்படாது என்பதையும், பயிற்சியின் நோக்கம் இனவெறி அழிவுகளிலிருந்து தமிழர்களை பாதுகாப்பதோடு, ஒரு பலம் பொருந்திய நிலையில் தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பலன்கிடைக்கும் என்பதாலும் தான் என விளக்கப்பட்டது.
என்ற போதிலும் இந்தியாவின் நம்பிக்கைகள் தகர்ந்தது. தமிழர்களுக்கான உரிமைகளை படிப்படியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாதிக்கமுடியுமென்று நம்பிக்கை கொள்வதற்கு சாத்வீக வழியில் வந்தவர்கள்அல்லவே போராளிகள்!
1987-ல் ஜெவர்ததனே - ராஜீவ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி இலங்கை மண்ணில் நிரந்தரமான நல்லிணக்கம் உருவாகிடும் என இந்தியா மெய்யாகவே நம்பியது.
ஆனால் அனைத்து போராளி இயக்கங்களும் இதற்கு உடன்பட்ட நிலையில் விடுதலைப்புலிகள் மட்டும் இணங்கமறுத்தனர்.
தனிநாடு என்பதற்கு தடை ஏற்படுமானால் இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்ப்போம் என அவர்கள் நடைமுறையில் நிருபித்தனர்.
இதன் விளைவு தமிழ்மக்களின் நண்பனாக, பாதுகாவலனாக சென்ற இந்திய அமைதிப்படையை தனது சதித்திட்டங்களால் தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றினர் விடுதலைப்புலிகள்.
இந்திய ராணுவவீரர்கள் சுமார் 1300பேர் இலங்கை மண்ணில் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் அல்ல. தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்துவதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளால்!
எந்த இலங்கை அரசை கொடுங்கோலனாக அடையாளப்படுத்தி இந்திய அரசிடம் நிதிஉதவியும்,இந்திய ராணுவத்திடம் ஆயுதப்பயிற்சியும் விடுதலைப் புலிகள் பெற்று கொண்டனவோ அந்த இந்திய ராணுவத்தை அந்த கொடுங்கோல் இல்ஙகை அரசின் நிதிஉதவி, ஆயுததளவாடங்களை பெற்று இலங்கை மண்ணில் கொன்றனர்.அவை போதாதென்று தமிழகம் வரை துரத்தி வந்து 1991-ல் ராஜீவ்காந்தியை கொன்றொழித்தனர். இந்திய ராணுவத்தை எதிர்க்க துணைபுரிந்த பிரேமதாசாவையும் 1993-ல் கொன்றுவிட்டனர்.
இந்தியாவிற்கு அனுசரணையாக இருந்ததாக சந்தேகப்பட்டே சீறிசபாரத்தனிம், பத்மநாபா,அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்...போன்ற நானூறுக்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழ் தலைவர்களைக் கொன்றனர்.
இந்திய உளவு அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்தார் என்று சந்தேகித்தே தன் இயக்கத்தின் மாபெரும் தளபதியான மனத்தையாவையும், நூற்றுக்கணக்கான அவரது ஆரதவாளர்களையும் கொன்றார் பிரபாகரன்.
தங்களின் நோக்கங்களுக்கு இந்தியா எதிரானது என்பது விடுதலைபுலிகளின் உள்ளார்ந்த ஆழ்நத நம்பிக்கை. எனவே தான் தமிழகத்தில் தமிழிழ ஆதரவாளர்கள் இந்திய அரசுக்கு எதிராக பலவிதமாக பேசி தமிழகமக்களை மூளைச்சலவை செய்கின்றனர்.
இதனால் தான் தமிழகத்திலுள்ள தமிழிழ ஆரதவாளர்கள் வேறெந்த நோக்கத்தையும் விட, வேறெந்த பிரச்சாரத்தையும் விட இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் இடையறாது செய்து விடுகின்றனர்.
இலங்கையில் தமிழ் ஈழம் உருவாவது போல் இந்தியாவில் தமிழ் தேசிய தன்னாட்சி மலரவேண்டும் என்பது இவர்களின் தணியாத பேராசையாகும்! இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் வலுப்பட்டு தமிழ் மக்கள் நம்பிவிட்டால் தங்கள் நோக்கம் நிறைவேறிவிடும் என்பது இவர்களின் திட்டம்.
நல்லவேளையாக இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட தமிழக மக்கள் தேர்தலில் இவர்களை நிராகரித்துவிட்டனர். இங்கே பிரிவினைவாதத்திற்கோ வன்முறைக்கோ ஆதரவில்லை என்பதை நிருபித்துவிட்டனர்.
இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழர்களும் கூட தங்கள் நாடு இரு கூறுகளாகப் பிரிந்து சீர்கெடவும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் பலியாவதையும் விரும்பவில்லை.
தனிஈழம் என்பது யதார்த்ததில் கொஞ்சம் கூட ஏற்கமுடியாத ஒரு கற்பனைவாதம் என்ற நிதர்சனத்தை அனுபவ பூர்வமாக, மிக அழுத்தமாக இலங்கைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டனர்.
இலங்கையில் மொத்தம் 24 மாகாணங்கள். இதில் தமிழர் பிரதேசம் என்று சொல்லக்கூடிய வடக்கு கிழக்கு மகாணங்களில் வசிக்கும் தமிழர்களைக் காட்டிலும் மிக அதிகமானவர்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களோடு இரண்டற கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்ல, இநத வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் குறிப்பாக கிழக்கு மாகணத்தில் வாழ்பவர்கள் தனிதமிழ் ஈழத்தை விரும்பவில்லை. ஏனெனில் இவர்கள் கிழக்கு மாகணத்தில் இஸ்லாமியர்களோடும், சிங்களமக்களோடும் இணக்கமாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டார்கள், யாழ்பாணத்தமிழர்கள் ஆதிக்கவாதிகள் என்பது அவர்களின் அனுபவம் கூறும் உண்மை!
மேலும் தமிழ் பிரதேசங்களில் வசிக்கும் தலித்மக்களும் யாழ்ப்பாண உயர் சாதி ஆதிக்கசக்திகளின் பிடியில் வாழ்வதை அடியோடு வெறுக்கின்றனர். தனிஈழம் பற்றி பேசினாலே இலங்கையில் உள்ள தலித் மக்கள், அடிமைகளும், எஜமானர்களும் சேர்ந்து தனி ஈழம் கட்டமைக்க முடியாது" என்கிறார்கள்.
தமிழ்பேசும் இஸ்லாமியமக்களில் 70 சதவிகிதத்தினர் தமிழ் ஈழபிரதேசத்திற்கு வெளியே சிங்கள இன மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் இனவெறி ஆதிக்க சக்திகளால் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் அடைநத இன்னல்களையும், இழப்புகளையும் எழுத ஒரு அத்தியாயம் போதாது. ஆக அவர்களும் தனி ஈழத்திற்கு உடன்படவில்லை.
மலையகத்தமிழர்களாகிய இந்தியாவம்சாவழித்தமிழர்களோ என்றுமே இலங்கை தமிழ் ஆதிக்க சக்திகளால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அவர்களும் தனிஈழத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
இந்நிலையில் யாருக்காக தனிஈழம் கோரிக்கை வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு தமிழ்ஈழ ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
தமிழ்ஈழ ஆதரவாளர்கள் கூறுவது போல் சிங்களமக்கள் அனைவருமே தமிழர் விரோதிகளோ, எதிரிகளோ அல்ல. அவர்களுக்கிடையிலும் சில இனவெறி அமைப்புகள் உண்டு. ஆனால் அவை பெரும்பான்மை சிங்களர்களின் ஆதரவை பெற்றவையல்ல.
1956ல் பண்டாரநாயகா தமிழர் உரிமைகளை பறிக்கும் சில சட்டங்களைக் கொண்டுவந்தார்.சிங்கள இனவெறிக்கு வித்திட்டு கலவரங்களை உருவாக்கினார். 1958தேர்தலில் சிங்களமக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்தனர்.1994ல் சந்திரிகா இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் தந்து சிங்களர்- தமிழர் சமாதான சகவாழ்வுக்கு பாடுபடுவேன் என்றார். சிங்கள மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர்.
அதே போல் அவரும் விடுதலைப் புலிகளுடனான சமாதான முயற்சிகளுக்கு சாத்தியப்பாடான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
தமிழ் மக்களும் சந்திகாவின் முயற்சிகளை அன்பு மேலோங்க வரவேற்றனர். இலங்கை அரசு அதிகாரிகள் தமிழர் பகுதிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது தமிழ்மக்கள் ஆர்பாட்ட வரவேற்பளித்து ஆரத்தழுவி வந்திறங்கிய வானூர்தியை முத்தமிட்டு ஆனந்தித்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல, நான்குமுறை விடுதலைப்புலிகளை தேடிவந்து பேசினார்கள் இலங்கை அதிகாரிகள். ஏறத்தாழ 40 முறை சந்திரிகா பிரபாகரனுக்கு கடிதங்கள் எழுதி மன்றாடினார். விடுதலைப்புலிகளின் வில்லங்கமான நிபந்தனைகளையெல்லாம் கூட நிறைவேற்றி இறங்கிவந்தார்.
இதனால் தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டனர். அவர்கள் இலங்கைஅரசை ஆதரிக்கும் மனநிலைக்குச் செல்வதை புலிகள் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அரசாங்கத்தின் கப்பல்களை குண்டு தாக்கி அழித்தனர். சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிர். இதற்கு எதிர்வினையாற்றவேண்டிய கட்டாயத்திற்கு சந்திரகா அரசாங்கத்தை தள்ளினார்.
வழக்கமாக அரசு எடுக்கும் எதிர்வினை நடவடிக்கைகளில் இருந்து தாங்கள் தப்பித்துக்கொண்டு அப்பாவிமக்களை பலியாக்கினார். அரசாங்கத்தை மக்களுக்கு எதிரானதாக அடையாளப்படுத்தி தங்கள் சர்வாதிகாரத்தை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் நிலைநாட்டினர்.
ரணில்விக்கிரசிங்கேவும் இலங்கையில் அமைதியை முன்னெடுப்பேன் என்று சொன்னதாலேயே சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஏற்கெனவே சந்திரிகா அரசானது பல கசப்பான அனுபவங்களைபெற்றதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்திருந்தது. ஆனால் ரணில் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கி உறுதியாக சமாதானத்தை நிலைநாட்டினார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அரசாங்கம் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியபோதிலும், விடுதலைப்புலிகள் மறற தமிழ் இயக்கங்களின் மீதான தடையை கடைசிவரை விலக்கிகொள்ளவில்லை.
சமாதான முயற்சிகளில் சமரசமின்றி ஈடுபட்ட ரணில்விக்கிரமசிங்கேவிற்கு தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும்தமிழர்கள் வாக்களிக்காத வண்ணம் விடுதலைப்புலிகள் கட்டளையிட்டனர்.
இதனால் "விடுதலைப் புலிகளை இராணுவத்தை கொண்டு ஒடுக்கி இலங்கையை பயங்கரவாத அபாயத்திலிருந்து மீட்டெடுப்பேன்" என சூளுரைத்த ராஜபக்ஷேக்கு சிங்களமக்கள் ஆரதவளித்தனர்.
ஏனெனில் அநத அளவுக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை அரங்கேற்றி மக்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டனர். புத்ததுறவிகள், இஸ்லாமிய மத பெரியோர்கள், இந்துமத குருமார்கள், கத்தோலிக்கபாதிரியார்கள்.... என யாருமே தப்பவில்லை விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச்செயல்களுக்கு!
ஜனநாயகவாதிகள், அறிவுஜீவிகள், சமூகசேவகர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை தினசரி புலிகளுக்கு பலியாயினர். தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்த உன்னதமான அனைத்து பிரமுகர்களும் கொல்ல்ப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் ராஜபக்சே எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்று விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து தமிழ்மக்களை காப்பற்ற முயற்சிக்காத புலிகள் கடைசிகடடத்தில் வெள்ளைகொடி தாங்கி பிரபாகரனை காப்பாற்ற முயன்றனர். அது பலிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி என்பது தமிழர்கள் வாழ்வின் மறுமலர்ச்சி என்பதை இனி நிருபிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குள்ளது. இந்திய மக்களும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் இதைத்தான் இலங்கை அரசிடம் எதிர்ப்பார்க்கின்றன.
இந்த நம்பிக்கையை பரிபூரணமான இதயசுத்தியோடு நிறைவேற்றி
தமிழர்கள் - சிங்களர்கள் இடையே சமமான நல்வாழ்வை உறுதிபடுத்தாமல், தன் கூட்டாளிகளான சிங்கள இனவெறியாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ராஜபக்ஷே பணிந்து விட்டால் அவரது முடிவு பிரபாகரனுக்கு நேர்ந்ததை விடவும் மோசமானதாகிவிடும்!

Thursday, March 12, 2009

இலங்கை பிரச்சசை தீர்வு என்ன?

-சாவித்திரிகண்ணன்

"ஐயகோ தமிழ் ஈழம் பற்றி எரிகிறதே..."

"தமிழர்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்படுகிறார்களே..."ஒண்ட இடமின்றி, உண்ண உணவின்றி இரண்டு லட்சம் மக்கள் பட்டினியால் துடிக்கிறார்களே...." என்ற குரல்கள் கடந்த ஆறேழு மாதங்களாக தமிழகமெங்கும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து இலங்கையில் இம்சைக்குள்ளாகும் மக்களுக்கு ஆதரவான பல்வேறு வகையிலான போராட்டங்கள், பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, "இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும். அதற்கு இந்தியா உத்தரவிடவேண்டும். ஆனால் இந்திய அரசோ வாளாயிருக்கிறது. தமிழக காங்கிரஸோ இன்னும் ராஜீவ்கொலையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறதேயன்றி இலங்கை தமிழர்கள் மேல் அனுதாபம் கொள்ள மறுக்கிறது...." என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக வைக்கப்பட்டுவருகிறது. இலங்கையில் பெரும் இம்மைக்குள்ளாகியிருக்கும் தமிழ்மக்களுக்கான இரக்க உணர்வுகளும், இதில் இந்தியா ஏதாவது தலையிட்டு அங்கே நடக்கும் அக்கிரமங்கள் முடிவுக்கு வராதா? என்ற ஆதங்கங்களும் அலட்சியப்படுத்த தக்கவையல்ல. மிகவும் நியாயமானவை, இயல்பானவை. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

ஆனால் இதில் எதுவுமே நடக்க முடியாத ஒரு சூழல் அங்கே நிலவுகிறது. அந்த யதார்த்தை உணர மறுத்தோ, மறைத்தோ கட்டமைக்கப்படும் உணர்ச்சி கொந்தளிப்பு பயனற்றது என்பது மட்டுமல்ல, ஆபத்தானது பல உள்நோக்கங்களை உள்ளடக்கியது.

இலங்கையில் ஒரு நிரந்தர அமைதி நிலவ, அங்கே தமிழர்கள், சிங்களர்கள் உள்ளிட்ட சகல இனமக்களும் நிம்மதியாய் வாழ, இந்திய அரசு இடையறாது சுமார் 26 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறது. இப்போதும் ஈடுபட்டுளளது. அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் இழுபறியாகிக் கொண்டிருப்பதில் இந்தியாவை விட அதிக கவலைப்படும் நாடு வேறெதுவாக இருக்கமுடியும்...? அதுவும் இலங்கை தமிழர்களின் துயரம் தமிழகத்தில் எதிரொலித்து தமிழகத்தின் இயல்புவாழ்க்கையை ஸ்தம்பிக்குமளவுக்கு போவதையும் இந்திய அரசு கவனிக்காமல் இல்லை.

தனித்தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்கிறார்கள் விடுதலைப்புலிகள். கடந்த 26 ஆண்டுகளாக இந்தியாவும், பிறகு நார்வேயும் பலமுறை அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பையும் இணங்க வைத்துப் பார்த்தாயிற்று. ஆனால் இந்த 26 வருட அனுபவத்தில் விடுதலைப் புலிகள் தாங்கள் பலஹீனமடையும் போது பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார்கள். அநத அவகாசத்தில் ஆயுதங்களை வாங்கி குவிக்கவும், இயக்கத்திற்கு புதிய நபர்களை கொண்டு வரவும் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்கள் தேவைகள் முடிந்ததாக கருதினால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு குண்டு வெடிப்புகளில் இறங்கி விடுவார்கள்.

பேச்சுவார்த்தை என்பதையும், போர்நிறுத்தப்படவேண்டும் என்பதையும் ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொள்ளும் போர் தந்திரமாக தொடர்ந்து விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதால் தான் சமாதான முயற்சியில் ஈடுபட்ட நாடுகளெல்லாம் சலிப்படைந்துவிட்டன.

இது தான் நாங்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு.... என்று பகீரங்கமாக அறிவித்து இந்த தீர்வு எட்டப்படும் பட்சத்தில் இனி ஜனநாயக நீரோட்டத்தில் இணையத் தயார். அதற்கான மனந்திறந்த உரையாடலுக்கு இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என்று புலிகள் தரப்பில் இதுவரை அறிவிக்கவில்லை.

இங்கே புலிகளை ஆதரிப்பவர்களும், தமிழ் ஈழத்தில் மக்கள் சாகிறார்களே என கூப்பாடு போடுபவர்களும், அநத மக்களை காப்பாற்றுவதற்காகவேனும் புலிகளிடம் கோரிக்கை வைக்க துணியவில்லை. ஏனெனில் புலிகள் எவர் கோரிக்கைகளையும் நிராகரிக்கக் கூடியவர்கள் என்பது இவர்களுக்கும் தெரியும்.

1986 வரைக்குமான இலங்கை பிரச்சினை என்பது வேறு, இப்போதைய இலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமவளர்ச்சி என்பது முற்றிலும் வேறானது என்ற புரிதல் நமக்கு அவசியம்.

இலங்கை தமிழர் பிரச்சினை என்பது இந்தியாவின் தேசியப்பிரச்சினை என பகிரங்கமாக அன்று அறிவித்தார் இந்திராகாந்தி. அன்று அதற்கான பந்த் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டபோது அதில் மத்திய அரசும் பங்கேற்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை, ரயில் விமான சேவைகள் ரத்து, ஏனெனில் இந்திய மக்களும் இந்த துக்கத்தில் பங்கெடுக்கின்றனர் என அறிவித்தவர் இந்திராகாந்தி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை கோரியவர் இந்திராகாந்தி. 1983 - ல் ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேச ஏற்பாடு செய்தது அன்றைய இந்திய அரசு.

"இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்தியா முழுவதையுமே கவலையில் ஆழ்த்துகிறது" என கூறி பிரதமராயிருந்த காலகட்டம் முழுமையிலும் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டவர் ராஜீவ்காந்தி.

இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவி புரிவதற்கு ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்த காலகட்டங்கள் உண்டு.

போரில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது அன்றைய இலங்கை அரசின் விருப்பதிற்கு மாறாக பலமுறை கப்பல்களிலும், விசைப்படகுகளிலும், விமானங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான டன் உணவுப்பொருட்களை விநியோகித்தார் ராஜீவ்காந்தி.

1987-ல் தமிழக காங்கிரஸ் தனது சொந்த நிதியாக ஒரு கோடியை இலங்கை தமிழர்களுக்கு தந்தது.

அன்று முதல் இன்று வரை பல லட்சம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் புகழிடம் தந்து உணவும், உறைவிடமும் வழங்கிவருகிறது இந்திய அரசு. இதையெல்லாம் இப்படி பட்டியல் போட்டு சொல்வதால் இலங்கை பிரச்சினையில் நான் காங்கிரஸ் ஆதரவாளனோ என வாசகர்கள் தீர்மானிக்க வேண்டாம்.

எனக்கு இலங்கை பிரச்சினையிலான இந்திய அரசின் அணுகுமுறைகளில் சில மாற்று கருத்துகள் நிச்சயமாக உள்ளன.ஆனால் வள்ளுவரின் வாக்கின் படி,குணம்நாடி, குற்றமும் நாடி அவற்றில் மிகைநாடிமிக்க கொளல்என்பதை நினைவில் கொண்டே எழுதுகிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கை அரசின் பேரினவாதப் போக்கால் தான் உருவானது என்பதிலும், முதல் 25 ஆண்டுகள் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற மிதவாதத் தலைவர்கள் அரசியல் தீர்வுக்கு ஆர்வம் காட்டிய போது அலட்சியம் காட்டிய சிங்கள அரசின் இனவெறி அணுகுமுறையே ஆயுத போராட்டத்திற்கு அடிகோலியது என்பதிலும் நமக்கு மாற்று கருத்து இல்லை.

அதனால் தான் அன்று இந்தியா ஈழப் போராளிகுழுக்களுக்கு தார்மீக உதவியை தந்தது. ஆயுதப் பயிற்சியும், அளப்பரிய நிதிஉதவிகளும் அன்றைக்கு இலங்கை போராளிகளுக்கு இந்தியா வழங்கிய போது, அது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தீர்மானத்திற்கு எதிரானது என்பதை உணர்திருந்த போதிலும், இலங்கை அரசின் இனவெறிபோக்கே இந்தியாவின் நிலைபாட்டிற்கு நியாயம் கற்பிக்க உதவியது எனலாம்.

எனவே இந்தியாவின் தலையீட்டிற்கு பணிய வேண்டிய நிர்ப்நதம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டதை த் தொடர்ந்து "அனெக்சர் சி' எனப்படும் திட்டத்தை இந்தியா இலங்கை அரசுக்கு வழங்கியது. மீண்டும் ராஜீவ்காந்தி காலத்தில் நட்வர்சிங், பா.சிதம்பரம் போன்றவர்கள் இலங்கையில் இனப்பாகுபாடற்ற ஆட்சிமுறைக்கான ஒரு திட்டத்தை தயாரித்தளித்தனர்.

அதை ஏற்கும்படி அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனாவை இணங்க வைத்தார். 1987 ஜீலை 29-ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சிங்களர் மத்தியில் ஏற்படுத்திய கொந்தளிப்பின் விளைவாக, விஜயமுனி என்ற சிப்பாய் ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் மண்டையை பிளக்க முயன்றபோது ராஜீவ்காந்தி சுதாரிந்துக் கொண்டு உயிர்தப்பினார்.

'உண்மையில் இலங்கை பிரச்சினைக்கு அது ஒரு இறுதியான தீர்வல்ல' என்ற போதிலும் அது ஒர் நல்ல ஆரம்பம் என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு ஒப்பந்ததிற்கு உடன்பட்ட மாத்திரத்தில் இரு இனங்களுக்கிடையிலான 2500 வருடப் பகை உடனடியாக முடிவுக்கு வந்துவிடாது. எனினும் போர் இரு தரப்பிலும் அளப்பரிய இழப்புகளையும், அதற்கும் மேலாக ஒரு சலிப்பையும் உருவாக்கி, சாதாரண மக்கள் இரு தரப்பிலுமே நிம்மதியான வாழ்வுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை.

ஆனால், அநத ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பமாகக் கருதி ஆரோக்கியமான சூழலுக்கு அடிகோல வேண்டிய பொறுப்புணர்ச்சியை முற்றிலும் தட்டிக் கழித்தனர், விடுதலைப்புலிகள்.

அந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மற்ற போராளிகுழுக்களை வேட்டையாடினர். ஆங்காங்கே பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றினர். அமைதிக்கு முயன்ற இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் சூட்சமான திட்டங்களை மக்களை நிர்பந்தித்து அரங்கேற்றினர். இறுதியில் புலிகள் இலங்கையின் சிங்கள அரசியல் சூழலில் ஜெயவர்த்தனேக்கு எதிர்நிலையில் இருந்த பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்திய அரசை இழிவுபடுத்தினார்கள்.

எந்த இன எதிரிகளுக்காக புலிகள் இந்தியாவின் உதவியை நாடினார்களோ, பெற்றார்களோ, நன்கு அனுபவித்தார்களோ அநத எதிரிகளோடு கடைசியில் கைகோர்த்துக்கொண்டு இந்திய அரசை இழிவுபடுத்தியது என்பது ராஜீவ்காந்தியின் கொலைக்கு ஈடான பெரும் கொடுமையாகும்.

இந்திய அரசின் அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்தது என்பது ராஜீவ்காந்தியின் தோல்வியல்ல. இந்திய அரசின் தோல்வி. இந்திய மக்களின் நல்லெண்ண முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வி. இந்த கசப்பான அனுபவம் தான் இந்திய அரசு நிர்வாகத்திற்கு இன்று வரை இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்டது எனலாம்.

ராஜீவ்காந்தி கொலை என்பது விடுதலைப் புலிகளது பயங்கரவாதச் செயல்களின் ஒரு அம்சம்.

1986-ல் சகோதர இயக்கங்களுக்கு தடைவிதித்து தங்களது அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இது நாள் வரை இலங்கை தமிழ் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என நானூறுக்கு மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான சக தமிழ்போராளிகளைக் கொன்றுள்ளனர். போரில் விருப்பமில்லாத அப்பாவி தமிழ் மக்களின் குடும்ப குழந்தைகளை நிர்பந்தித்து போர் முனைக்கு அனுப்பி இது வரை 24,000 பேரைக் கொன்றுள்ளனர். போருக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளனர். போர்களத்திற்கு வலிந்து அனுப்பபட்ட தமிழ்மக்களின் இளஞ்சிறார்கள் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட மனமின்றி சயனைடு குப்பிகளை உட்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட சம்பவங்கள் அநேகம்..!!

தனது இயக்கத்திலுள்ளவர்கள் காதலித்தாலே அவர்களுக்கு மரணதண்டனையை அரங்கேற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் மட்டும் மதிவதினி என்ற இன்னொருவரை காதலித்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்து கல்யாணம் செய்ததிலும், இவ்வளவு உக்கிரமான போர்களுக்கு இடையிலும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களை போருக்கு பலியாக்காமல் நல்ல முறையில் வளர்த்திருப்பதிலுமிருந்து அவருடையயோக்கியதையை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடுகிறோம் என தலையெடுத்து இன்று அந்த மக்களையே நிரந்தரபிணைக் கைதிகளாக்கி, சொல்லொணா கொடுந்துயரத்திற்கு ஆளாக்கிவரும் விடுதலைப் புலிகளின் கொடுமைகள் குறித்து தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகள் தரும் தகவல்கள் நெஞ்சை உறையவைக்கின்றன".

இது மட்டுமின்றி சர்வதேச தளத்தில் அவர்கள் நிகழ்ந்தி கொண்டிருக்கும் அரசியல் படுகொலைகளாலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் அவர்களை மிரட்டி காசுபறித்ததிலும், பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதிலும் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா....உள்ளிட்ட சுமார் 32 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலே தமிழ் இளைஞர்கள் முதன் முதலாக போராட்டக்களம் இறங்கிய போது தமிழர்கள் பிரச்சினைக்காகசிங்களமக்களில் நடுநிலையாளர்கள், அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி, டிராட்ஸ்கியக் கட்சி, சமசமாஜகட்சி.... போன்ற தரப்பின் ஆதரவுக்குரல்கள் இருந்தன. அன்றைய போராளிகளின் லட்சியமாக "சோஷலீச தமிழ் ஈழம்" இருந்தது.

ஆனால் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டம் திசைமாறி பயங்கரவாத இயக்கமாக பரிணாமம் பெற்றபின்பு அது பொதுமக்கள் கூடும் இடங்களான சந்தைகள், பஸ்நிலையங்கள், புத்தவிகாரர்கள், மசூதிகள்... என தொடர்ந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி சிங்கள மக்களை அபரிமிதமாக தொடர்ந்து கொன்று குவித்ததில் சிங்களமக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும், அனுதாபத்தையும் இழந்துவிட்டது.

விடுதலைப் புலிகளின் வெறிச் செயல்களால் ஏற்பட்டுள்ள எதிர்வினையானது சிங்கள மக்களை இனவெறிக்கு தூண்டிவிட்டு ஒற்றுமைகொள்ள வைத்து, அதன் விளைவே இன்று ராஜபக்சே போன்றவர்கள் ராணுவபயங்கரவாதத்தை அரங்கேற்ற காரணமாயிற்று!

இதன் மூலம் தங்களின் தமிழ் ஈழ இலட்சியத்தை தாங்களே படுகுழிக்குள் தோண்டி புதைத்துவிட்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டுக் கொண்டதோடு தங்களை நம்பிய மக்களையும் தாங்கொணாத துயரத்திற்கு ஆட்படுத்திவிட்டனர் புலிகள்!

சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்களை பலிகொடுத்து, ஆறுலட்சம் மக்களை அகதிகளாக்கி அந்நியநாடுகளில் புலம்பெயரச்செய்து, சொந்தமண்ணிலேயே பல லட்சம் மக்களை அகதிமுகாம்களுக்கு ஆட்படுத்தியது தான் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் நடத்திய வேள்வியாகும்.

உண்மையில் இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உடனடியாக வேண்டுவது அமைதியான வாழ்க்கையை, நிரந்தரமான நிம்மதியை! அப்படிப்பட்ட தொரு வாழ்க்கையை மக்களுக்கு அமைத்துத் தருவதற்கு மக்களைநேசிக்கும் தலைமை தேவை.

பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளால், நுட்பமான ராஜதந்திர அணுகுமுறைகளால் வென்றெடுக்கும் விவேகம் பொருந்திய தலைமை தேவை.எப்போதும், எல்லாக் காலங்களிலும் ஆயுதங்களும், அழித்தொழிப்புகளுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை. ஆயுதத்தை எடுக்கும் சந்தர்ப்பத்தை தெரிந்தவர்களுக்கு ஆயுதத்தை கீழே வைக்கும் ஆன்மபலம் அவசியமாகும்!நேபாளத்தில் 'மாவோயிஸ்டுகள்' ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டனர். பாலஸ்தீனத்தில் பன்நெடுங்காலம் போராடிய 'ஹமாஸ்கள்' தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நுழைவுக்குப் பிறகு ஏற்பட்ட அவலங்களும், அழிவுகளும் முடிவின்றித் தொடர்கிறது. தாலிபான்களால் தருவிக்கப்பட்ட துயரமல்லவா அது?

காஷ்மீரில் தீவிரவாத பாதைக்கு தீர்வு தேடத் தொடங்கிவிட்டனர் மக்கள் என்பதற்கு ஆதாரமாக தேர்தலில் மக்கள் காட்டிய உற்சாகம் தெளிவு படுத்திவிட்டது.

இலங்கையில் கடந்த 30ஆண்டுகளாக தமிழ்மக்கள் போராளிகளுக்காக தங்கள் சொத்து, சுகங்களை இழந்து, பெற்ற குழந்தைகளை காவுகொடுத்து நிம்மதியற்ற நிலைமைகளை எவ்வளவு நாள் சகித்துக் கொள்ள முடியும்?

கடந்த 30ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகளுக்கான எல்லா பிரயத்தனங்களையும் பிரயோஜனமில்லாலாக்கியதில் விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பிருக்கிறதா இல்லையா?

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி கொடுங்கோண்மை அரசுக்கு எதிரான நெல்சன்மண்டேலாவின் அறவழிப்போராட்டம் ஒரு காலகட்டத்திற்குப் பின் கனிந்தா? இல்லையா?

ஒரு காலத்தில் கறுப்பர் இன மக்கள் ஒட்டுரிமையற்றவர்களாக ஒடுக்கப்பட்ட அமெரிக்காவில் இன்று கறுப்பினத்தைச் சார்ந்த, இஸ்லாமியராகப் பிறந்த பாரக்ஒபாமா பார்வியக்க அதிபரானதற்கு என்ன காரணம்? வெள்ளையின மக்களைக் கூட அன்பால் வென்றெடுத்த சாதுர்யமல்லவா அவரது வெற்றியை சாத்தியப்படுத்தியது.

ஆனால் விடுதலைப்புலிகளோ ஆயுதபலத்தால் தங்கள் சொந்தமக்களையே அந்நியப்படுத்திக் கொண்டனர்.தமிழ்பேசும் இஸ்லாமியமக்கள் 75,000பேரை அதிரடியாக தங்கள் சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி அகதிகளாக்கினார்கள்.

சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்த, தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகத் தீரத்துடன் போராடிய தலித் இளைஞர்களை சுட்டுக்கொன்று துப்பாக்கி முனையில் சாதி ஆதிக்கத்தை தூக்கி பிடித்தவர்களல்லவாபுலிகள்?

மலையகத் தமிழர்களை ஒரு போதும் மனிதர்களாகக் கூட மதித்ததில்லையே விடுதலைப்புலிகள்...!!

மட்டத்தட்டியே வைக்கப்பட்ட மட்டக்களப்பு தமிழர்கள் இனி குட்டக்குட்ட குனியமாட்டோம் என்று கட்டவிழ்த்து வந்து தங்கள் தனித்துவத்தை நிலைகாட்டிக் கொண்டது தானே அண்மைக் கால வரலாது?இத்தனை தமிழ்மக்களையும் புறந்தள்ளிவிட்டு விடுதலைப்புலிகள் அமைக்கத் துடிக்கும் தனி ஈழதேசம் என்பது மக்களுக்கானதா?அவர்களது சர்வாதிகாரத்தை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கானதா?

உண்மையில் இன்று தமிழ்மக்களில் 50சதவிகிதத்திற்கும் அதிகமனோர் இவர்கள் அமைக்கத்துடிக்கும் தமிழ் ஈழத்திற்கு வெளியே சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களோடு இரண்டறக் கலந்துஇருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை புறக்கணிக்க முடியுமா?

இங்கே புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் தலைவர்கள் புலிகள் தான் தமிழர்களின் பாதுகாவலர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப் படாதபாடுபடுகிறார்கள்.

இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

இந்திய அரசின் தலையீட்டினால் இலங்கையில் 48மணிநேர போர் அவகாசம் ஏற்பட்டபோது போர்பகுதிகளிலிருந்து தப்பித்து வெளியேறத் துடித்த தமிழர்களை துரத்தி,துரத்தி கொன்றவர்களல்லவா விடுதலைப்புலிகள்?இவர்களிடமிருந்து தப்பித்து வந்த தமிழ்மக்கள் இந்த உண்மைகளை உரத்துக் கூறியும் இன்னும் தமிழ் மக்களை எத்தனை காலம் புலிகளின் புறநானூற்று வீரம் பேசி மயக்கி கொண்டிருக்க முடியும்?

மிகச்சமீபத்தில் (மார்ச் 9) போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500மெட்ரிக் டன் உணவு பொருட்களை சுமந்து வந்த கப்பலை சுற்றி வளைத்து சுட்டுதள்ளி, உணவுபொருட்களை கடலுக்குள் கவிழ்த்திய விடுதலை புலிகளின் மனிதாபிமானத்தை என்னென்பது?

ஏற்கெனவே உலகவர்த்தக மையம், இலங்கை மத்தியவங்கி, தலதாபுத்த கோயில், காத்தான்குடி, ஏறாவூர் மசூதிகள் போன்றவற்றில் நிகழ்த்திய நூற்றுக்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுவெடிப்புகளும் போதாதென்று மார்ச்10ந்தேதி மாத்திறை ஜீம்மா மசூதி அருகே மீலாதுநபி ஊர்வலத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களையும் கூட தமிழக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தன்நிகரற்ற வீரம் என புகழ்வார்களா?

இதில் புலிகளை ஆதரிக்கும் புதிய வரவாக தமிழக பா.ஜ.க கட்சியும் புலிகள் ஆதரவாளர்களோடு கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என கூக்குரலிடும் பா.ஜ.கவினர், உலகின் மிக மோசமான பயங்கரவாத சக்தியான புலிகளை ஆதரிப்பது ஏன்?

இலங்கை பிரச்சனையை வெறுமனே பௌத்தமதத்திற்கும், இந்து மதத்திற்குமான போராக பார்க்கும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளின் குறுகிய பார்வை மிகவும் ஆபத்தானது.

இலங்கையில் சிங்களபௌத்த இன.மதவெறியே இல்லை என்று நாம் வாதாடவரவில்லை. ஆனால் ஒரு இனவெறிக்கெதிரான மற்றொரு இனவெறியோ, ஒரு மதத்திற்கு எதிரான மற்றொரு மதவெறியோ பிரச்சனைகளை மேன்மேலும் வளர்க்கவே உதவுமேயன்றி தீர்வாகாது.

இன்று இலங்கைத் தமிழர்களுக்காக வைகோ நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை குறை கூறுகிறார் அத்வானி. மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்த காலகட்டங்களில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டாண்டுகளுக்கொரு முறை மீண்டும் நீடித்த கட்சிதான் பா.ஜ.க.

இன்று காங்கிரஸ் அரசை குற்றவாளி கூண்டில் ஏற்றத்துடிக்கும் பா.ஜ.க ஆட்சியில் இலங்கை அரசோடு இந்திய அரசுக்கு இருக்கும் ராஜ்ஜிய உறவுகள் ரத்து செய்யப்பட்டிருந்ததா என்ன? ஐ.என்.எஸ. சரண்யூ என்ற போர் கப்பலை 2001ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு இலங்கை அரசுக்கு வழங்கியதை மலினமான தேர்தல் அரசியலுக்கு உள்ளாக்கினால் அது சரியாகுமா?

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்குமான ராஜிய உறவுகள், இராணுவ புரிந்துணர்வு பரிவர்த்தனைகள், கொடுக்கல் வாங்கல் , கூட்டு ராணுவ பயிற்சி...... போன்றவற்றை குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக மேடைகளில் பேசுவது மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறை.

இப்படி வாதிடுவதால் சிங்கள அரசின் பேரினவாதத்திற்கு இந்தியா துணைபோகலாம் என கூறுவதாகிவிடாது. இந்தியா மட்டுமல்ல இலங்கைக்கு உதவி செய்யகூடிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே போன்ற மற்ற நாடுகளும் கூட பல்வேறு சமயங்களில் இலங்கை அரசை இனப்பிரச்சனைக்கு இணக்கமான அரசியல் தீர்வை தரும்படி நிர்பந்திக்கத்தான் செய்கின்றன.

இதன் விளைவாக இலங்கை அரசின் அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உருவாகி இனப்பிரச்சனைக்கு இணக்கமான தொரு சூழல் கனிந்த போதெல்லாம் புலிகள் அதை புறந்தள்ளி பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

இன்றைக்கு புலிகளின் பயங்கரவாதமே ராஜபட்சேயின் அரசபயங்கரவாதத்திற்கு நியாயம் கற்பிக்க காரணமாயிற்று. ஆக, இன்னொரு நாட்டிலே செயல்படும் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக இந்திய அரசு தன்னுடைய பாதுகாப்புநலன்களையோ, ராஜதந்திர உறவுகளையோ மாற்றி அமைக்க நாம் கோருவது நடைமுறையில்பலனளிக்காது. இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க வோ, அல்லது மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்தால் கூட அது இலங்கை பிரச்சினையில் இன்றைய அரசு கடைபிடிக்கும் கொள்கைக்கு மாறாக நிச்சயமாக இராது.

எனவே விடுதலைப் புலிகளிடம் பிணைக் கைதிகளாகவுள்ள இரண்டுலட்சம் தமிழர்கள் மீட்கப்படவேண்டும் அதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் குரல் கொடுக்கவேண்டும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள், மலையகத் தமிழழர்கள், இஸ்லாமியர்கள், தலித்துக்கள், கிறிஸ்த்துவர்கள்.... என அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு பேச்சுவார்த்தை பரந்து விரிந்த தளத்தில் நடைபெறவேண்டும் அதில் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அவர்களால் தடைசெய்யப்பட்டுள்ள ஈராஸ், பிளாட், EPDP, TMVP...... உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் பங்குபெற வேண்டும். அந்த சூழ்நிலையில் இலங்கை அரசை இனபாகுபாடற்ற சுமூகச் சுழலுக்கு உடன்பட வைக்க இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடத்துடிக்கும் மனிதாபிமானமுள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும்.

Saturday, January 24, 2009

அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-

சாவித்திரிகண்ணன்

ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?